தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/545 எஸ்.ஐ., பணிக்கு மறுதேர்வு ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

545 எஸ்.ஐ., பணிக்கு மறுதேர்வு ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

545 எஸ்.ஐ., பணிக்கு மறுதேர்வு ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து


UPDATED : ஆக 05, 2023 12:00 AM

ADDED : ஆக 05, 2023 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2023 12:00 AM ADDED : ஆக 05, 2023 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில், 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, மறுதேர்வு நடத்துவது பொருத்தமாக இருக்கும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.கர்நாடகாவில், 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, 2021ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி, தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், பலரும் முறைகேடு செய்து வெற்றி பெற்றது தெரிந்தது. இதனால், சி.ஐ.டி., விசாரணைக்கு, அப்போதைய பா.ஜ., அரசு உத்தரவிட்டது. இவ்வழக்கில் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத்பால் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மறுதேர்வு நடத்த அப்போதைய பா.ஜ., அரசு முடிவு செய்தது. இதற்கு, நேர்மையாக தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரசின் முடிவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.ஐ., பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த, கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்தது. மேலும், முறைகேடு செய்தவர்களை விட்டுவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை,பணிக்கு தேர்வு செய்ய சாத்தியம் உள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், மனு மீது நேற்று விசாரணை நடந்தது.நீதிபதிகள் தினேஷ்குமார், சிவசங்கர் கவுடா கூறுகையில், 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, மறுதேர்வு நடத்துவதே சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும் என்றனர். அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், எங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க, கால அவகாசம் வேண்டும், என்றார். மனு மீதான விசாரணையை, வரும் 7ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us