தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் மதிய உணவு தரமாக வழங்க அமைச்சர் உத்தரவு

பள்ளியில் மதிய உணவு தரமாக வழங்க அமைச்சர் உத்தரவு

பள்ளியில் மதிய உணவு தரமாக வழங்க அமைச்சர் உத்தரவு


UPDATED : ஆக 05, 2023 12:00 AM

ADDED : ஆக 05, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2023 12:00 AM ADDED : ஆக 05, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கா விட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 900 கோடி ரூபாய் ஒதுக்கி, சீருடை, சைக்கிள், பாடப் புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறது. நீங்கள் பிளஸ் 1 படிக்கும் போது லேப் டாப் வழங்கப்படும். மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு விரைவில் வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தரமான உணவு வழங்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இவற்றை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us