UPDATED : ஆக 05, 2023 12:00 AM
ADDED : ஆக 05, 2023 01:58 PM
சென்னை:
செஸ் உலகத் தர வரிசைப் பட்டியலில், ஒன்பதாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள, தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தர வரிசை பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 9ம் இடம் பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் வாயிலாக, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராகி உள்ளார்.அவருக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
சர்வதேச செஸ் கூட்டமைப்பின், உலகத் தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள, கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டுகள். உங்கள் உறுதியும், திறனும், செஸ் ஆட்டத்தில் உலக அளவில் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கும், இந்திய வீரராக உங்களை நிலை நிறுத்தி உள்ளன. உங்கள் சாதனை, உலகம் எங்கும் உள்ள இளந் திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும், நம் தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
