UPDATED : ஆக 05, 2023 12:00 AM
ADDED : ஆக 05, 2023 05:29 PM
சென்னை:
தட்டச்சு பயிற்சி மையங்களில், ஒரு மாதத்தில், குறைகளை சரிசெய்யாவிட்டால், அங்கீகாரம் ரத்தாகும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தட்டச்சு பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள், தங்களின் பயிற்சி மைய அங்கீகாரத்தை, ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இதில் சில மையங்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில், சில குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதனால், கடந்த ஆண்டே அங்கீகாரம் புதுக்கப்பிக்கப்படவில்லை. இந்த பயிற்சி மையங்கள் இன்னும் ஒரு மாதத்துக்குள் குறைகளை நிவர்த்தி செய்து, கடிதம் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், அவற்றின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
