UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 09:50 AM
சென்னை:
அரசு டாக்டர்கள் பணியிட மாறுதலில் மாவட்ட வாரியான முன்னுரிமை ரத்து செய்யப்பட்டதால் டாக்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழக அரசு டாக்டர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மருத்துவ கல்வி இயக்குனரகம் கீழ் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர்.இதுகுறித்து ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கலந்தாய்வில் 2007 முதல் மாவட்ட வாரியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 131 அரசாணையை பயன்படுத்தி சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களில் சீனியர்கள் இருந்தால் அவர்களுக்கு முதல் வாய்ப்பு; அதன்பின் அடுத்தடுத்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு என்ற அடிப்படையில் கலந்தாய்வு நடந்து வந்தது. தற்போது நடந்து வரும் கவுன்சிலிங்கில் அந்நிலை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுதும் ஒரே சீனியாரிட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுவதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சீனியர் டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையீட்டு பழைய முறைப்படி, கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
