தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலாசாரம் மிகுந்த மாநிலம் தமிழகம்- ஜனாதிபதி பாராட்டு

கலாசாரம் மிகுந்த மாநிலம் தமிழகம்- ஜனாதிபதி பாராட்டு

கலாசாரம் மிகுந்த மாநிலம் தமிழகம்- ஜனாதிபதி பாராட்டு


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலையில், ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 ஜனாதிபதிகள் படித்துள்ளனர் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர், வணக்கம் எனக்கூறி தனது உரையை துவக்கினார். தொடர்ந்து பேசுகையில், பல நூற்றாண்டுகளாக திருக்குறள் நம்மை வழிநடத்துகிறது. வளமான கலாசாரம், நாகரீகம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தின் கோயில் சிற்பங்கள், மனித குலத்தின் திறமைக்கு சான்றாக அமைந்து உள்ளது. தமிழகம் கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக உள்ளது.6 ஜனாதிபதிகள் படித்த பல்கலை.,
பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலை திகழ்கிறது. நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு பங்காற்றி உள்ளது. பல தலைவர்கள், நோபல் பரிசு வென்றவர்களை உருவாக்கி உள்ளது. சென்னை பல்கலை., எண்ணற்ற வெற்றியாளர்களை உலகிற்கு அளித்து உள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு பல வழிகளில் சேவை புரிந்துள்ளது. ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 ஜனாதிபதிகள் இந்த பல்கலை.,யில் தான் படித்துள்ளனர். சர். சிவி ராமன், வெங்கட்ராமன் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் இங்கு படித்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us