புத்தக கண்காட்சி, இலக்கிய விழா: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
புத்தக கண்காட்சி, இலக்கிய விழா: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
UPDATED : ஆக 08, 2023 12:00 AM
ADDED : ஆக 08, 2023 09:18 AM
அ நிறம் | அளவு
நுாலகத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மாநில அளவில் குழு தலைவராக பொது நுாலக இயக்குனர், உறுப்பினர் செயலராக பொது நுாலக இணை இயக்குனர், உறுப்பினர்களாக ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் கே.அருண்மணி, பாடநுால் கழக இணை இயக்குனர் சங்கரசரவணன், தென்னிந்திய புத்தக விற்பனை, பதிப்பாளர் சங்க தலைவர் செயல்படுவர்.மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்துார், திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் போன்ற ஏ கிரேடு மாவட்டத்திற்கு தலா ரூ.30 லட்சம், வேலுார், துாத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கரூர், கடலுார் போன்ற பி கிரேடு மாவட்டத்திற்கு தலா ரூ.25 லட்சம், மற்ற சி கிரேடு மாவட்டத்திற்கு தலா ரூ.20 லட்சம் வீதம் அரசின் மானியமாக வழங்கப்படுகிறது, என்றார்.
