தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துமகூரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

துமகூரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

துமகூரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஆக 08, 2023 12:00 AM

ADDED : ஆக 08, 2023 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2023 12:00 AM ADDED : ஆக 08, 2023 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு:
துமகூரு பல்கலைக்கழகத்தின், 16வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கர்நாடக கவர்னரும், பல்கலையின் வேந்தருமான தாவர்சந்த் கெலாட் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.விழாவில் அவர் பேசியதாவது:
பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்பு கல்லுாரிகளும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் பிரச்னையை தடுக்க வேண்டும். கல்வித் துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் படிப்பை பாதியில் நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மாணவர்கள் அவர்களின் பிரச்னைகளை கேட்டு, அவற்றைத் தீர்த்து, சிறந்த கல்வியை பெற வழிவகை செய்ய வேண்டும்.மிக பழமைநம் கல்வி, கலாசாரம், பாரம்பரியம், மிகவும் பழமையானது. பழங்காலத்திலிருந்தே வசுதைவ குடும்பகம் என்ற தத்துவம் மற்றும் தியானத்தை மையமாக கொண்டது. சர்வே பவந்து சுகினோ சர்வே சந்து நிராமய என்ற உணர்வால் ஈர்க்கப்பட்டு, உலகளாவிய சகோதரத்துவம், நல்லிணக்கம், உலக அமைதிக்காக பாடுபட்டு சமத்துவத்தை கற்பிக்கிறோம். பழங்காலக் கல்வி முறை ஆளுமை உருவாக்கம், ஆன்மிக அறிவு மற்றும் தனிநபரின் முழு வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. இதன் காரணமாக நாம் உலக குருக்களாக கருதப்படுகிறோம், நமது பொருளாதாரம் மிகவும் வலுவானது, நம் நாடு தங்க பறவை என்று அழைக்கப்படுகிறது. நாட்டை உலக சாம்பியனாக்க கடுமையாக உழைக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி என்பது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் பெற எளிதான வழியாகும்.வேலை கொடுக்கும் முதலாளி
மாணவர்களின் திறமையை மேம்படுத்தி, வேலை வாய்ப்புள்ள தொழில்நுட்ப படிப்புகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டால், வேலை கொடுக்கும் முதலாளியாக மாறுவர். அடுத்த 25 ஆண்டுகளில், நமது நாட்டை உலகின் தலைசிறந்த நாடுகளுக்குள் கொண்டுவர வேண்டியது நமது கடமை. இதற்காக நம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். வானிலை மாற்றம் பெரிய பிரச்னையாக உள்ளது. இது நீர், வனம் மற்றும் காற்று பாதுகாப்புக்காக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு இளைஞர்கள் கைகோர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us