தேனி மருத்துவக் கல்லூரியில் வெல் பேபி கிளினிக் துவக்கம்
தேனி மருத்துவக் கல்லூரியில் வெல் பேபி கிளினிக் துவக்கம்
UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 09:31 AM
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பிரசவ வார்டில் சராசரியாக மாதம் 604 சுகப்பிரசவம், சிசேரியன் மூலம் பிறக்கின்றன. கர்ப்ப காலமான 40 வாரங்கள் முழுமையடையாமல் சில காரணங்களால் அதற்கு முன்னரே அதாவது 37 வாரங்களுக்கு முன் நடக்கும் பிரசவம் குறைமாத பிரசவமாகும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை டாக்டர்கள் குறைமாத குழந்தைகள் என அழைக்கின்றனர். குறை பிரசவத்திற்கான காரணம் குழந்தை பாதுகாப்பாக இருக்க உதவும் பனிக்குடம் உடைவது, ஆரோக்கியமற்ற உணவு முறையால் குறைபிரசவம் நடந்து வருகிறது. குறிப்பாக 2 கிலோ 500 கிராம் எடை முதல் 3 கிலோ வரை உள்ள குழந்தைகள் ஆரோக்கியம் மிக்கதாகவும், அந்த எடைக்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள் பாதிப்பு உள்ள குழந்தையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை பரிசோதனைகள் மூலம் பாதிப்புகள் கண்டறியப்படும்.இதனை தவிர்க்க கலெக்டர் ஷஜீவனா, பொது சுகாதாரத்துறை, பச்சிளங்குழந்தைகள் நலத்துறை தலைவர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின், இம்மாதிரியான பிரச்னைகளை களைய வெல் பேபி கிளினிக் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவங்க அறிவுறுத்தினார். அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் இந்த கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.முதல்வர் திருநாவுக்கரசு கூறியதாவது:
குறைமாத குழந்தை என கண்டறியப்பட்டவர்களுக்கு வாரத்தின் புதன், வெள்ளிக் கிழமைகளில் மருத்துவக் கல்லுாரியில் துவங்கியுள்ள அதி கவன பச்சிளங்குழந்தைகள் வெளி நோயாளிகள் பிரிவு ( வெல் பேபி கிளினிக்) இயங்கும். இங்கு 2 நாட்களிலும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கிளினிக் செயல்படும். அனைத்து வகையான குறைமாத குழந்தைகளின் பிரச்னைகளுக்கும் டாக்டர்களின் ஆலோசனையின் படி சிகிச்சைகள் அளித்து குணப்படுத்தப்படும். இந்த கிளினிக் ஏழை எளிய பெற்றோர்கள் பயனடைவர், என்றார்.
