தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் மேஜிக் பேர்

அமெரிக்காவில் மேஜிக் பேர்

அமெரிக்காவில் மேஜிக் பேர்


UPDATED : ஆக 09, 2023 12:00 AM

ADDED : ஆக 09, 2023 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2023 12:00 AM ADDED : ஆக 09, 2023 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
வளம் குன்றா வளர்ச்சி என்ற இலக்கைநோக்கியே, அமெரிக்காவின் அனைத்து கண்காட்சி அரங்குகளும் அமைந்திருப்பது, திருப்பூருக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின், லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும், மேஜிக் பேர் என்பது, சர்வதேச ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்துக்கு வழிகாட்டியாக அமைகிறது. மத்திய அரசின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் சிறப்பு சலுகையுடன், இந்திய ஏற்றுமதியாளர்களும் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் சரிந்திருந்த ஆடை விற்பனை, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதால், இதுவரை இல்லாத அளவுக்கு, அமெரிக்காவில் நடக்கும், மேஜிக் பேர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உரியதாக மாறியுள்ளது. திருப்பூரில் இருந்து மட்டும், 28 ஏற்றுமதி நிறுவனங்கள், கண்காட்சி அமைத்திருப்பது மற்றுமொரு சிறப்பு. மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சியில், ஒவ்வொரு நாடுகளும், பிரத்யேகமாக கண்காட்சி அமைக்கின்றன. அதன்படி, இந்தியாவும், 120க்கும் அதிகமான ஸ்டால்களுடன், பிரத்யேக கண்காட்சி வளாகம் அமைத்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குனர் சந்தோஷ்குமார் சாரங்கி, திறந்து வைத்தார். இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், எம்.எஸ்.எம்.இ., கூடுதல் செயலர், ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.கண்காட்சி குறித்து, பியோ தலைவர் சக்திவேல் கூறியதாவது:
மந்தநிலையில் இருந்த அமெரிக்க ஜவுளி வர்த்தகம், அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது என்பது, கண்காட்சி வாயிலாக தெரிகிறது. வளம் குன்றா வளர்ச்சி என்ற இலக்கை நோக்கியே, அனைத்து கண்காட்சி அரங்குகளும் அமைந்துள்ளன. ராயல் கிளாசிக் நிறுவனத்துக்கு, சிறந்த வளம் குன்றா வளர்ச்சி சார்ந்த உற்பத்தி நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவன இணை நிர்வாக இயக்குனர் சுகேஷ் விருதை பெற்றுக்கொண்டார். அமெரிக்காவின், மேஜிக் பேர் கண்காட்சி, மிகுந்த எழுச்சியுடன் நடப்பது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us