UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 04:28 PM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே, ஊட்டி சாலையில் கல்லாறில், மலைகளுக்கு மத்தியில், 120 ஆண்டுகள் பழமையான அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இங்கு குரும்பபாளையம், ஆதித்யா பள்ளி மாணவர்கள், கல்வி சுற்றுலா வந்தனர். தோட்டக்கலை பண்ணையில் உள்ள மரங்கள், செடிகள், வாசனை திரவியம் மற்றும் அலங்கார செடிகள் ஆகியவற்றை மாணவர்கள் சுற்றி பார்த்தனர். பண்ணை பணியாளர்கள் மரங்கள், செடிகளின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினர். 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரத்தை, மாணவர்கள் பார்த்து ரசித்தனர். இது குறித்து கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்கள் கூறுகையில், பள்ளி கல்வித்துறை வாயிலாக, தோட்டக்கலை துறைக்கு, கடிதம் கொடுத்து அனுமதி பெற்றால், இலவச மற்றும் குறைந்த கட்டணத்தில் பண்ணையை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர், என கூறினர்.
