பள்ளிக்கு செல்லாமல் டீக்கடையில் படம் பார்க்கும் கிராம மாணவர்கள்
பள்ளிக்கு செல்லாமல் டீக்கடையில் படம் பார்க்கும் கிராம மாணவர்கள்
UPDATED : ஜன 11, 2010 12:00 AM
ADDED : ஜன 11, 2010 11:23 AM
அ நிறம் | அளவு
மேற்கு வங்க கிராமத்தில் டீக்கடையில், "டிவி&'யில் கத்ரினா கைப் போன்ற நடிகை, நடிகர்களின் படங்கள் ஓடினால், அங்குள்ள பள்ளியில் பாடம் நடக்காதாம். பள்ளியில் உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினரை, டீக்கடையில் தான் பார்க்க முடிகிறதாம். மேற்கு வங்கம் மாநிலம், கோல்கட்டாவில் இருந்து 300 கி.மீ., தொலைவில் உள்ளது ஜோத்கானாய் கிராமம். இங்கு, 2,000 பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் ஏழை கூலித் தொழிலாளர்களான இவர்கள், "டிவி&' வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ளனர்.
இவர்களது குழந்தைகள் பக்கத் தில் இருக்கும் முர்ஷிதாபாத் கிராமத்தில், ஆரம்ப பள்ளியில் படித்து வருகின்றனர். மொத்தம் உள்ள 160 குழந்தைகளில், 50 குழந்தைகள் டீக்கடைகளில், "டிவி&'யில் ஒளிபரப்பப்படும் சினிமா படங்களை பார்க்க சென்று விடுகின்றனர். ஜோத்கானாய் கிராம வாசி ஒருவர் கூறுகையில், "இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள்.
முழுநேரமும் குழந்தைகளை வைத்து கண்காணிக்க முடியாது என்பதால் பள்ளிக்கு அனுப்பி விடுகிறோம். காலை 10.30 மணிக்கு செல்லும் அவர்கள், மாலை 4.30க்கு தான் வீடு திரும்புகின்றனர். பள்ளியில் படிக்கின்றனரா இல்லையா? என்பது குறித்து எதுவும் எங்களுக்கு தெரிவதில்லை&' என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் சுதாகர் மண்டல் குறிப்பிடுகையில்,"ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்கள் சிறார்கள் என்பதால் அவர்களை கண்டிக்க முடியவில்லை.
பள்ளி தலைமையாசிரியர் சுதாகர் மண்டல் குறிப்பிடுகையில்,"ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்கள் சிறார்கள் என்பதால் அவர்களை கண்டிக்க முடியவில்லை.
முழு நேரமும் டீக்கடையில் அவர்கள் இருப்பது எங்களுக்கு தெரிகிறது. டீக்கடைகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும், பள்ளிகளின் ஆய்வாளருக்கும் புகார் அளித்து இருக்கிறோம்&' என்றார். இந்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அதிகாரி பதிலளிக்கையில், "கிராம ஊராட்சித் தலைவரை, குழந்தைகளை பள்ளிக்கு செல்ல வழி வகுக்குமாறு கேட்டுள்ளோம். நாங்கள் நேரடியாக நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது. இது சட்டத்துக்கு புறம்பான செயல் அல்ல&' என்றார்.
