தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்பில் இரட்டை குடியுரிமை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மருத்துவ படிப்பில் இரட்டை குடியுரிமை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மருத்துவ படிப்பில் இரட்டை குடியுரிமை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை


UPDATED : ஆக 09, 2023 12:00 AM

ADDED : ஆக 09, 2023 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2023 12:00 AM ADDED : ஆக 09, 2023 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
இருவேறு மாநிலங்களில் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனரகத்தால் 2023-24ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டிலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், 162 பேர் தமிழக அரசு ஒதுக்கீடு, 36 மாணவர்கள் கேரளா அரசு ஒதுக்கீட்டில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆகவே, இரட்டை குடியுரிமை அடிப்படையில் இருவேறு மாநிலங்களில் விண்ணப்பித்த 198 மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடங்களை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us