தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 10, 2023 12:00 AM

ADDED : ஆக 10, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2023 12:00 AM ADDED : ஆக 10, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது செய்திக்குறிப்பு:
பிரதமரின் கல்வி உதவிதொகை வழங்கும் திட்டம் கீழ், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதையொட்டி, இந்த கல்வியாண்டில் இதர பிற்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய, சீர்மரபினர், பழங்குடி பிரிவைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3,093 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இது பற்றிய விபரங்கள் http://yet.nta.ac.in இணையதளத்தில் உள்ளது. 9 அல்லது பிளஸ் 1 படித்து கொண்டிருக்க வேண்டும்.தேசிய தேர்வு முகமை மூலம் நடக்கும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு வரும் 10ம் தேதிக்குள் http://yet.nta.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 29ம் தேதி நடக்கிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் மொபைல், ஆதார், வங்கிக் கணக்கு எண், வருவாய், ஜாதிச் சான்றிதழ் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us