தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் படித்தோருக்கு ஸ்காலர்ஷிப்புடன் பி.இ., படிப்பு

பாலிடெக்னிக் படித்தோருக்கு ஸ்காலர்ஷிப்புடன் பி.இ., படிப்பு

பாலிடெக்னிக் படித்தோருக்கு ஸ்காலர்ஷிப்புடன் பி.இ., படிப்பு


UPDATED : ஆக 10, 2023 12:00 AM

ADDED : ஆக 10, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2023 12:00 AM ADDED : ஆக 10, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பாலிடெக்னிக்கில் படித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையுடன் இணைந்து, உதவித்தொகையுடன் கூடிய பி.இ., படிப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுவர் என ஹெச்.எல். மேண்டோ ஆனந்த் நிறுவனம் தெரிவித்து உள்ளது.ஒப்பந்தம்
இதுகுறித்து, ஹெச்.எல். மேண்டோ ஆனந்த் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அண்ணா பல்கலையின் காஞ்சிபுரம் கல்லுாரியில், ஒருங்கிணைக்கப்பட்ட பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்பை வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு, வாரம் ஐந்கு நாட்கள் மற்றும் மூன்று மணி நேர வகுப்பு நடக்கும். மேண்டோ நிறுவனத்தில், வாரம் ஆறு நாட்கள் பயிற்சியுடன் வேலை வழங்கப்படும். கல்லுாரி வளாகத்தில் உணவு, தங்கும் வசதி உண்டு. கல்வி கட்டணத்தை, 100 சதவீதம் மேண்டோ நிறுவனமே செலுத்தும். மாதம் தோறும், 11,500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.வேலைவாய்ப்பு
வளாகங்களுக்கு இடையே போக்குவரத்து வசதியும் உண்டு. மாணவர்கள் படிக்கும் காலத்தில், மருத்துவ காப்பீடு வழங்கப்படும். படிப்பு முடிந்த உயர்திறன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கடந்த, 2022, 2023ம் கல்வி ஆண்டில், 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று, டிப்ளமா முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படுவர். மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலை மேற்கொள்ளும். இதுகுறித்து, ஹெச்.எல். மேண்டோ ஆனந்த் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் எஸ்.சாரதி கூறுகையில், இந்த படிப்புக்கு, https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html என்ற இணையதளம் வழியே, நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை, 78248 00523 என்ற வாட்ஸ் ஆப் வசதியுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us