தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவி பேராசிரியரை மாற்றக்கோரி தர்ணா

உதவி பேராசிரியரை மாற்றக்கோரி தர்ணா

உதவி பேராசிரியரை மாற்றக்கோரி தர்ணா


UPDATED : ஆக 11, 2023 12:00 AM

ADDED : ஆக 11, 2023 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2023 12:00 AM ADDED : ஆக 11, 2023 09:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி:
வியாசர்பாடியில், அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, தாவரவியல் மற்றும் தாவர உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவராக முனைவர் பாலாஜி உள்ளார்.இந்த நிலையில், அண்ணாமலை பல்கலையில் இருந்து அயல் பணியாக, இந்த துறைக்கு உதவி பேராசிரியராக ரவிமைசின்என்பவர் புதிதாக வந்துள்ளார். இவர், ஜூன் 19ம் தேதி, துறை தலைவரிடம் தகராறு செய்து, நான் தான் பெரியவன்; என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, துறை தலைவர் பாலாஜி, கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஜூன் 21ம் தேதி, முதல்வர் விசாரணை நடத்தி உள்ளார். இதில், அந்த துறையின் கவுரவ விரிவுரையாளர் கலைக்கந்தன், 35, ஆய்வகஉதவியாளர் முருகேசன் ஆகிய இருவரும், ரவி மைசினுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர்.இதனால், ஆத்திரம் அடைந்த ரவிமைசின், அவர்களுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான கலைக்கந்தன், கடந்த 2ம் தேதி கல்லுாரியில் புகார் மனு கொடுத்த நிலையில், 6ம் தேதி வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தாவரவியல் துறை மாணவ - மாணவியர், 120க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, கறுப்பு சட்டை அணிந்து வந்து, ரவிமைசின் கொடுத்த தொல்லையால் தான், கலைக்கந்தன் உயிரிழந்தார். எனவே, ரவிமைசினை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரி வளாகத்தில் தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us