UPDATED : ஆக 11, 2023 12:00 AM
ADDED : ஆக 11, 2023 11:25 AM
எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான, நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதி தேர்வை ஒருங்கிணைத்து, நெக்ஸ்ட் என்ற தேசிய தகுதி தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டது. இதற்கான தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில், மத்திய அரசின் ஆலோசனைப்படி, நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் ஒத்தி வைத்து உள்ளது. அதேநேரம், இந்தாண்டு மருத்துவ கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, நான்கரை ஆண்டுகளுக்கு பின், 2028ல் நெக்ஸ்ட் தேர்வு நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதில், பல் மருத்துவ படிப்பையும் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பல் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க செயலர் ரவீந்தரநாத் கூறுகையில், எம்.பி.பி.எஸ்., படிப்பை தொடர்ந்து, பல் மருத்துவ மாணவர்களுக்கும், நெக்ஸ்ட் தேர்வு நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரண்டிற்கும், நெக்ஸ்ட் தேர்வை முற்றிலும் கைவிட வேண்டும், என்றார்.
