UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 06:03 PM
திருப்போரூர்:
திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுந்தர் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக போபால் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் பங்கேற்று ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். கிரிக்கெட், கபடி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம், கர்நாடகா, மத்திய பிரேதசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இன்று மாலையுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவடைகின்றன. நிறைவு விழாவில், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
