தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெயிக்கும் விளையாட்டுகளை கழற்றிவிட்ட எஸ்.ஜி.எப்.ஐ.,

ஜெயிக்கும் விளையாட்டுகளை கழற்றிவிட்ட எஸ்.ஜி.எப்.ஐ.,

ஜெயிக்கும் விளையாட்டுகளை கழற்றிவிட்ட எஸ்.ஜி.எப்.ஐ.,


UPDATED : ஆக 13, 2023 12:00 AM

ADDED : ஆக 13, 2023 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2023 12:00 AM ADDED : ஆக 13, 2023 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்து மாணவர்கள் ஜெயிக்கும் முக்கியமான விளையாட்டுகளை தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.) முதல் லிஸ்டில் வெளியிடவில்லை என, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகம் சார்பில் பால் பாட்மின்டன், கேரம், சிலம்பம், டெனிகாய்ட் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அதிகளவில் பரிசுகளை குவித்து வருகின்றனர். கடைசியாக 2019 - 20 ல் நடந்த போட்டியில் பால்பாட்மின்டன் 14, 17, 19 வயது ஆண், பெண் பிரிவு ஆறிலும் முதலிடம் பெற்றனர். பால்பாட்மின்டன் மகளிர் அணி பத்தாண்டுகளாக முதலிடத்தில் உள்ளனர். கேரம் அணியிலும் டெனிகாய்ட், சிலம்பத்திலும் வெற்றிகளை குவித்தனர்.குறிப்பாக இந்த போட்டிகள் எல்லாம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எளிதாக பதக்கங்களை வென்று அதன் மூலம் அரசு வேலைவாய்ப்பும் பெற்றனர். 2023 - 24க்கான விளையாட்டுகளில் முதல் லிஸ்டில் இந்த விளையாட்டுகள் எதுவும் இடம்பெறவில்லை. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளில் இல்லை என்பதால் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது என்கின்றனர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள்.அவர்கள் கூறியதாவது:
கடந்தாண்டு தாமதமாக அறிவிப்பு வெளியானதால் தமிழக மாணவர்களின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இந்த முறை வாய்ப்பே கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது.கவலைப்படாத எஸ்.டி.ஏ.டி.,
தேசிய விளையாட்டுகளில் முதல்பரிசு பெறும் மாணவர்களுக்கு அ.தி.மு.க., காலத்தில் ரூ.2 லட்சம், 2ம் பரிசாக ரூ.ஒன்றரை லட்சம், 3ம் பரிசாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது. தி.மு.க., வந்த பின் பரிசுத்தொகையை பாதியாக குறைத்து விட்டனர். முதல் பரிசு ரூ.ஒரு லட்சம், 2ம் பரிசு ரூ.75ஆயிரம், 3ம் பரிசு ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்.டி.ஏ.டி.,) பால்பாட்மின்டன், கேரம், டெனிகாய்ட், சிலம்ப விளையாட்டுகளுக்கு விளையாட்டு விடுதி இல்லாததால் மாணவர்கள் சேர்க்கையும் இல்லை. அதனால் மாணவர்கள் ஜெயித்தாலும் தோற்றாலும் ஆணையம் கவலைப்படுவதில்லை.ஆகாத விளையாட்டுக்கு முக்கியத்துவம்
எஸ்.ஜி.எப்.ஐ.,யில் கயிறு இழுக்கும் போட்டிக்கு முக்கியத்துவம் தந்து அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்துள்ளனர். ஆனால் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் இந்த போட்டி இல்லை. தமிழகத்து மாணவர்கள் ஜெயிக்கும் விளையாட்டுகள் தான் முதல்கட்டமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த லிஸ்ட் வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் தமிழக அரசு தலையிட்டு விளையாட்டுகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us