UPDATED : ஆக 14, 2023 12:00 AM
ADDED : ஆக 14, 2023 10:07 AM
போடி:
நாளை (ஆக., 15) நாடு 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் வருங்கால இந்தியா இளைஞர் கையில் என வலியுறுத்தும் வகையில் சாக்பீஸ் துண்டுகளில் சிற்பம் செதுக்கி சாதனை படைத்துள்ளார் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சிற்பக் கலை மாணவர் பிரேம்குமார்.பி.எஸ்சி., சிற்பக்கலை படித்து பட்டம் பெற்ற பிரேம்குமார், ஒரு சாக்பீஸ் துண்டில் ஒரு செ.மீ., அகலம் 3.5 செ.மீ., உயரத்திலும், 3 மி.மீ., உயரம் 9 மி.மீ., அகலத்தில் இளைஞர் தன் இரு கரங்களில் தேசியக் கொடியை தலைக்கு மேல் ஏந்தி கொண்டு, நடப்பது போல கொடியில் மூவர்ணங்களையும் 45 நிமிடங்களில் சிற்பமாக செதுக்கி சாதனை படைத்துள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். வரும் கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பதை விளக்கும் வகையில் சிற்பத்தை வடிவமைத்தாக அவர் தெரிவித்தார்.
