UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 11:30 AM
சென்னை:
தலைமை செயலக மொழி பெயர்ப்பு பிரிவை சேர்ந்த அலுவலர்களுக்கு, பிரிட்டிஷ் கலை நிறுவன ஆங்கில பயிற்சி சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஆட்சி சொல்லகராதி வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.தலைமை செயலகத்தின் மொழி பெயர்ப்புப் பிரிவை சேர்ந்த, இரண்டு துணை இயக்குனர்கள், நான்கு பிரிவு அலுவலர்கள், 12 உதவி பிரிவு அலுவலர்கள், பிரிட்டிஷ் கலை நிறுவனத்தில் ஆங்கில பயிற்சி பெற்றனர். அதற்கான சான்றிதழை, நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சாமிநாதன் அவர்களிடம் வழங்கினார்.அத்துடன் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககம் வழியாக, ஆட்சி சொல் அகராதியின் எட்டாம் பதிப்பை மூன்று பகுதிகளாக, அமைச்சர் வெளியிட்டார். முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழி பெயர்ப்புத் துறை இயக்குனர் அருள், பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவன இயக்குனர் ஜனகா புஷ்பநாதன் மற்றும்அலுவலர்கள் பங்கேற்றனர்.
