அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ பாராட்டு
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ பாராட்டு
UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 12:12 PM
பாகூர்:
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஆல் இந்தியா ரேடியோ ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி உள்ளது.கிருமாம்பக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி பயிலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் மின்னனுவியல் மற்றும் வேளாண்மை தொழிற் கல்வியை பற்றி ஆல் இந்தியா ரேடியோவில் பேசிப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இவர்களை பாராட்டும் வகையில், ஆல் இந்தியா ரேடியோ மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்கியது. அத்தொகையை பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களுக்கு பரிசாகவும் துணை முதல்வர் கருணாகரன் வழங்கினார்.நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் சத்தியவாணி தலைமை தாங்கி, பொறுப்பாசிரியர் ரங்கநாயகி மேற்பார்வையில், தொழிற்கல்வி ஆசிரியர் நிவேதா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
