தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு முறைகேடு: க்ளூ கிடைக்கவில்லையாம்!

பிளஸ் 2 தேர்வு முறைகேடு: க்ளூ கிடைக்கவில்லையாம்!

பிளஸ் 2 தேர்வு முறைகேடு: க்ளூ கிடைக்கவில்லையாம்!


UPDATED : ஆக 16, 2023 12:00 AM

ADDED : ஆக 16, 2023 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2023 12:00 AM ADDED : ஆக 16, 2023 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் நடந்த பிளஸ் 2 தேர்வு முறைகேடு குறித்து இதுவரை தலைமையாசிரியர், கண்காணிப்பாளர் என 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஆக., 17 மற்றும் 18ல் மேலும் பலரை விசாரிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முறைகேடு வெளியாகி 4 மாதங்களை கடந்தும் க்ளு கிடைக்காமல் விசாரணை அதிகாரிகள் திணறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் ஏப்., 5ல் திருத்தப்பட்டது. அப்போது மதுரை விடைத்தாள்கள் திருத்தப்பட்ட முகாமில் இரண்டு மாணவர்களின், மூன்று தேர்வுகளின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் இயற்பியல், வேதியியல் உட்பட 3 பாடங்களில் சென்டம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஒரே கையெழுத்து விவகாரத்தில் சந்தேகமடைந்த தேர்வுத்துறை விசாரணை நடத்தியதில் அவர்கள் மதுரையை சேர்ந்த ஒரே பள்ளி மாணவர்கள் என்றும், தேர்வின் போது இருவரும் அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்டவர்கள் எனவும் தெரிந்தது. இதையடுத்து அந்த இரண்டு மாணவர்களின் தேர்ச்சி முடிவை கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. மே மாதம் வெளியான இம்முறைகேடு விவகாரம் விசாரணை என்ற பெயரில் நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது என கல்வித்துறை மீது பெற்றோர், கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.*
கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வு நடைமுறை
கல்வியாளர்கள், பெற்றோர் கூறியதாவது: 
விடைத்தாள் கலக்கும் (ஸப்பிளிங்) முகாமில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது என்ற அடிப்படையில் நான்கு மாதங்களாக விசாரணை நடக்கிறது. அதாவது ஒரு தேர்வு முடிந்த மறுநாள், அந்த தேர்வுக்கான மாணவர்களின் மற்றொரு கையெழுத்துள்ள விடைத்தாள்களை ஸப்பிளிங்கில் சேர்த்து, முந்தை நாளின் ஒரிஜினல் விடைத்தாளை எடுத்துவிட முடிகிறது என்றால், இது தற்போதுள்ள பொதுத் தேர்வு நடைமுறையையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.இந்த முறைகேட்டில் ஒருசிலர் மட்டும் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. பலர் சேர்ந்து ஒரு நெட்ஒர்க் ஆக இந்த முறைகேட்டை செயல்படுத்தியுள்ளனர். முகாமின் பொறுப்பு அதிகாரி முதல் அடிப்படை ஊழியர்கள் வரை சந்தேகப்பட வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் முந்தைய பொதுத் தேர்வுகளிலும் நடந்துள்ளதா எனவும் விசாரணையை கல்வித்துறை துரிதப்படுத்த வேண்டும். இந்த முறைகேட்டால் முறையாக தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட பாதிக்கப்படவில்லை என்பதை கல்வித்துறை விளக்க வேண்டும் என்றனர்.*சம்பந்தப்பட்ட மதுரை விடைத்தாள் கலக்கும் முகாமில் மாவட்ட கல்வி அலுவலர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர் என 60க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். விவகாரம் வெளியாகி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முகாமில் பணியில் இருந்தவர்கள் சென்னையில் விசாரணைக்கு ஆஜராக தனித்தனியே தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் தேர்வுத்துறை இணை இயக்குநர் செல்வராஜ் விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் பலரும் விசாரிக்கப்படவுள்ளனர். அனைவரையும் சென்னைக்கு அழைப்பதற்கு பதில் அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us