தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலாண், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

மேலாண், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

மேலாண், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு


UPDATED : ஆக 16, 2023 12:00 AM

ADDED : ஆக 16, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2023 12:00 AM ADDED : ஆக 16, 2023 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
ஒப்பந்த அடிப்படையில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், வட்டார இயக்க மேலாண், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் என, 5 பணிகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண் அலகில், ஒப்பந்த அடிப்படையில், ஒரு வட்டார இயக்க மேலாளர் (நாமகிரிப்பேட்டை), நான்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (எலச்சிபாளையம் மற்றும் எருமப்பட்டி தலா, ஒன்று, வெண்ணந்துாரில், 2) பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். வட்டார இயக்க மேலாளர் பணிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், எம்.எஸ்., ஆபீசில் குறைந்தபட்சம் ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர், 28 -வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், எம்.எஸ்., ஆபீசில் குறைந்தபட்சம் மூன்று மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர், 28 -வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகுதி உடைய விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியான பெண்கள், தங்களது விண்ணப்பத்தை, வரும், 26க்குள், மாவட்ட இயக்க மேலாண் அலகில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us