10ம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் 18ல் வெளியீடு
10ம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் 18ல் வெளியீடு
UPDATED : ஆக 16, 2023 12:00 AM
ADDED : ஆக 16, 2023 06:18 PM
சென்னை:
நடைபெற்ற ஜூன்/ஜூலை 2023க்கான பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இம்மாதம் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த கல்வியாண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து மறுகூட்டல் முடிவுகள் மற்றும் தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில் இடம் பெறாத தேர்வெண்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
