UPDATED : ஆக 17, 2023 12:00 AM
ADDED : ஆக 17, 2023 10:23 PM
கோவை:
அரசு கல்லுாரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், காலியாகவுள்ள, 9,820 இடங்களில் இளநிலை மாணவர் நேரடி சேர்க்கை, 21ம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கோவை அரசு கலை கல்லுாரி, கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்தது. தொண்டாமுத்துார் அரசு கல்லுாரியில், 77 இடங்கள், அவினாசி அரசு கல்லுாரியில் ஒரு இடம், மேட்டுப்பாளையம் அரசு கல்லுாரியில் 49 இடங்கள், வால்பாறை அரசு கல்லுாரியில் 143 இடங்கள் உட்பட, மாநில அளவில் 9,820 இடங்கள் காலியாகவுள்ளன.இப்பட்டியல், https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி, நேரடியாக கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து கொள்ளலாம்.பாரதியார் பல்கலை
பாரதியார் பல்கலையின் கீழ், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் இளநிலை மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில், வரும் 23ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என, பதிவாளர் (பொறுப்பு) முருவேல் அறிவித்துள்ளார்.
