தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு

குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு

குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு


UPDATED : ஆக 18, 2023 12:00 AM

ADDED : ஆக 18, 2023 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2023 12:00 AM ADDED : ஆக 18, 2023 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்/ இளநிலை உதவியாளர்/ கள உதவியாளர்/ வரித் தண்டலர்/ பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது ஜூலை 20 முதல் ஆக., 10 வரை நடந்தது. இதில் 5364 இளநிலை உதவியாளர்/ வரித் தண்டலர்/ கள உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும்.மேலும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.,21 முதல் செப்.,11 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செப்., 20 முதல் 26 வரை நடைபெறும். தேர்வாணய அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் சிறார்களையும், முதியோர்களையும் உடன் அழைத்து வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us