UPDATED : ஆக 18, 2023 12:00 AM
ADDED : ஆக 18, 2023 11:02 AM
சென்னை:
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, நவீன திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.பெண்களிடம், தொழிற்கல்வி மற்றும் ஐ.டி.ஐ., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை கிண்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் என்ற தலைப்பில் திறன் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.இதில், அமைச்சர் கணேசன் பேசியதாவது:
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், 102 அரசு ஐ.டி.ஐ., 310 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 54 பொறியியல் தொழிற் பிரிவுகளிலும், 25 பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளிலும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, எதிர்கால வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெற வேண்டும். அதற்காக, தமிழக அரசு 2,877.43 கோடி ருபாய் செலவில் 71 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களை, 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி உள்ளது.டாடா மற்றும் புனே நிறுவனங்களுடன் இணைந்து 4.0 என்ற தரத்தில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், கருவிகள், உபகரணம், மென்பொருட்கள் நிறுவப்பட்டு, நவீன திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கமிஷனர் வீரராகவராவ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
