தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜவுளி கடையாக மாறிய அரசுப்பள்ளி: பெற்றோர்கள் அதிர்ச்சி

ஜவுளி கடையாக மாறிய அரசுப்பள்ளி: பெற்றோர்கள் அதிர்ச்சி

ஜவுளி கடையாக மாறிய அரசுப்பள்ளி: பெற்றோர்கள் அதிர்ச்சி


UPDATED : ஆக 18, 2023 12:00 AM

ADDED : ஆக 18, 2023 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2023 12:00 AM ADDED : ஆக 18, 2023 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில், மதிய நேர வேலையில் புடவை விற்பனை வியாபாரம் நடந்துள்ளது. புடவை வியாபாரியை பள்ளிக்குள் அழைத்து ஆசிரியர் ஒருவர் புடவை வாங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி என இரண்டும் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கல்வி பயில கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் அதிக அளவு வருகின்றனர்.இங்கு, பள்ளி வேலையில் மதிய நேரத்தில், புடவை வியாபாரி ஒருவர் ஆசிரியர்களுக்கு புடவை வியாபாரம் செய்துள்ளார் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளுக்கு பாடம் படிக்க பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் ஆசிரியர்கள் புடவை வாங்கி கொண்டிருக்கும் செயல், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி கூறியதாவது: 
வியாபாரி ஒருவர் பள்ளியில் புடவை வியாபாரம் செய்ய அனுமதி கேட்டார். பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வெளியில் சென்ற பின் ஆசிரியர்கள் வெளியே வரும் வேளையில் வியாபாரம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் மதிய வேளையில் வந்து ஆசிரியர்களுக்கு புடவையை காண்பித்துள்ளார். பள்ளி நேரத்தில் இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக்கூடாது என புடவை வியாபாரி மற்றும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us