தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் கவி பாடும் மணிக்கூண்டு: பாரதியார் பல்கலையில் அமைப்பு

பாரதியார் கவி பாடும் மணிக்கூண்டு: பாரதியார் பல்கலையில் அமைப்பு

பாரதியார் கவி பாடும் மணிக்கூண்டு: பாரதியார் பல்கலையில் அமைப்பு


UPDATED : ஆக 19, 2023 12:00 AM

ADDED : ஆக 19, 2023 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2023 12:00 AM ADDED : ஆக 19, 2023 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலையின் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் நினைவு நுாற்றாண்டை முன்னிட்டு பல்வேறு ஆராய்ச்சி, திட்டப்பணிகள் காணிநிலம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில், பாரதியார் உயராய்வு மைய கட்டடம் பல்கலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாரதியார் கவிக்குரல் மணிக்கூண்டு பல்கலை முகப்பில் திறக்கப்பட்டது. இம்மணிக்கூண்டு அமைப்பதற்கான, கட்டுமான பணி கடந்த, 2022 ஜன., மாதம் துவங்கியது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்த்துறை தலைவர் சித்ரா கூறுகையில், இம்மணிக்கூண்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பாரதியாரின் பாடல்களை ஒலியாக எழுப்பும். பாரதியார் நினைவு நுாற்றாண்டையொட்டி கட்டப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பாரதியார் பற்றி படிக்கவும், பாரதியார் கவிதைகளை வாசிக்கவும், வசதிகளை பாரதியார் உயராய்வு மையம் வாயிலாக திறப்பு விழாவிற்கு பிறகு ஏற்படுத்தப்படும். பாரதியார் பல்கலையில் பாரதியாரின் பெருமைக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்கு பல்கலை நிர்வாகம் ஒப்புதல் அளித்து, ஊக்குவித்துள்ளது. குறிப்பாக, பாரதி பாசறை அமைப்பினர் முழுஒத்துழைப்பை வழங்கி மணிக்கூண்டு அமைய காரணமாக இருந்தனர். இம்மணிக்கூண்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.கங்கா மருத்துவமனை தலைவர் மற்றும் பாரதி ஆய்வறிஞர் சண்முகநாதன் மணிகூண்டை திறந்து வைத்தார். சங்கர் அசோசியேட்ஸ் கட்டடக்கலை வல்லுநர் ரமணிசங்கர், பாரதி பாசறை செயலாளர் ஜான்பீட்டர், பல்கலை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us