தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்தி கிராம வேளாண் மாணவர்கள் விளக்கம்

காந்தி கிராம வேளாண் மாணவர்கள் விளக்கம்

காந்தி கிராம வேளாண் மாணவர்கள் விளக்கம்


UPDATED : ஆக 19, 2023 12:00 AM

ADDED : ஆக 19, 2023 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2023 12:00 AM ADDED : ஆக 19, 2023 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் உள்ள அரசு சாரா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஸ்ரீசக்தி பொருளாதார கல்வி நல அறக்கட்டளை.உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இங்கு தேனி , மதுரை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தென்னை மரத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் எவ்வாறு தயாரிப்பது, சந்தைப்படுத்துவது குறித்து கற்று அறிந்தனர். இவர்களுடன் திண்டுக்கல் காந்திகிராம பல்கலை இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்கள் ஷியாம் சுந்தர், சரவண கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ராஜாவும் பங்கேற்றனர். தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு பூச்சி கட்டுப்படுத்தும் முறை மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். உயிர் உரம் குறித்தும் அதற்கு அரசு வழங்கும் மானிய திட்டங்களையும் விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us