தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒன்பது கல்லூரிகளில் 21 பாடப்பிரிவு நிறுத்தம்: பல்கலை சிண்டிகேட் ஒப்புதல்

ஒன்பது கல்லூரிகளில் 21 பாடப்பிரிவு நிறுத்தம்: பல்கலை சிண்டிகேட் ஒப்புதல்

ஒன்பது கல்லூரிகளில் 21 பாடப்பிரிவு நிறுத்தம்: பல்கலை சிண்டிகேட் ஒப்புதல்


UPDATED : ஆக 19, 2023 12:00 AM

ADDED : ஆக 19, 2023 02:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2023 12:00 AM ADDED : ஆக 19, 2023 02:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லுாரிகளில், 9 கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த, சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.கல்லுாரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று, சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன் படி, 9 கல்லுாரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி, உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலை சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.இதுகுறித்து, பாரதியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லுாரிகளில், 9 கல்லுாரிகளில் இருந்து, 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர். கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன. மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us