ராஜிவ் காந்தி அரசு கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான்
ராஜிவ் காந்தி அரசு கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான்
UPDATED : ஆக 20, 2023 12:00 AM
ADDED : ஆக 20, 2023 10:43 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லுாரி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தேசிய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.கல்லுாரியின் பொறுப்பு முதல்வர் ஹென்னா மோனிஷா, கல்லூரிகளுக்கான தேசிய நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அருளரசி கொடியசைத்து துவங்கி வைத்தனர். கல்லுாரியில் துவங்கிய ஓட்டம் தானாம்பாளையம், ஆண்டியார்பாளையம், பிள்ளையார் திட்டு என 5 கி.மீ., சென்று நல்லவாடு புதிய பாலத்தில் முடிந்தது. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஆதவன், பிற துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
