தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடனில் குறைபாடு இருந்தால் முறையிடலாம்: கலெக்டர்

கல்விக்கடனில் குறைபாடு இருந்தால் முறையிடலாம்: கலெக்டர்

கல்விக்கடனில் குறைபாடு இருந்தால் முறையிடலாம்: கலெக்டர்


UPDATED : ஆக 20, 2023 12:00 AM

ADDED : ஆக 20, 2023 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2023 12:00 AM ADDED : ஆக 20, 2023 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரத்தில் மாவட்ட தொழில் மையம், சிறு, குறு நிறுவனங்கள், வங்கிகள் சார்பில், கடன் திட்டங்கள், கடன் வழங்குதல் குறித்த வசதியாக்கல் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பழனி தொடங்கி வைத்து, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு, கடன் திட்ட ஆணைகளை வழங்கி பேசியதாவது:
தமிழக அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, மாநில வங்கியாளர் குழுவினை வலியுறுத்தி, மாநில கடன் இலக்கை 2.77 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கான இலக்கு 2,483.13 கோடி ரூபாயாகும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், தமக்கான நிதியை எளிதில் பெறுவதையும், நிதி நிறுவனங்கள் அதற்கு கடன் வழங்குவதையும் உறுதி செய்ய அரசு துறைகள், நிதி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, காலாண்டுக்கொரு முறை கடன் வசதியாக்கல் முகாமை நடத்துகிறது.அதனடிப்படையில் இந்த முகாம் நடக்கிறது. வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு 111.22 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டில், மாவட்ட தொழில் மையம் மூலம் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் 126 பேருக்கு, 6.75 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூலதன கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில், கல்விக் கடன் குறைவாக உள்ளதால், அதிகளவில் வங்கிகள் கடன் தர வேண்டும். இதில் குறைபாடு இருந்தால், பெற்றோர், மாணவர்கள் என்னிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.மாவட்ட தொழில் மைய மேலாளர் அருள், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் குமார் துரை, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர்கள் இளஞ்செல்வி, யசோதாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், குறு, சிறு தொழில் நிறுவன சங்கத் தலைவர் அம்மன் கருணாநிதி மற்றும் வங்கியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us