கால்நடை மருத்துவ ஆலோசகர் தற்காலிக பணி: தேர்வுக்கு அழைப்பு
கால்நடை மருத்துவ ஆலோசகர் தற்காலிக பணி: தேர்வுக்கு அழைப்பு
UPDATED : ஆக 20, 2023 12:00 AM
ADDED : ஆக 20, 2023 11:09 AM
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது, 516 பிரதம சங்கங்களின் மூலம், தினசரி சராசரி, 1.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.அதன்படி, கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று, தற்போது இருக்கும் கால்நடை மருத்துவர்களுடன் காலியாக உள்ள, 3 கால்நடை மருத்துவ ஆலோசகர், தற்காலிக பணியிடத்திற்கு, 12 மாத காலத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பணிபுரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் (வயது வரம்பு, 50க்குள்), தங்களை பற்றிய முழு விபரங்களுடன், சான்றிதழ்களுடன் பொது மேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், ஈ.பி., காலனி, பரமத்தி சாலை நாமக்கல்-637001 என்ற முகவரியில், வரும் 29ல் காலை 11:00 மணிக்கு நடக்கும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
