தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரிகளை மிஞ்சும்படி அரசு ஐ.டி.ஐ., ஆய்வகம்: கலெக்டர்

பொறியியல் கல்லூரிகளை மிஞ்சும்படி அரசு ஐ.டி.ஐ., ஆய்வகம்: கலெக்டர்

பொறியியல் கல்லூரிகளை மிஞ்சும்படி அரசு ஐ.டி.ஐ., ஆய்வகம்: கலெக்டர்


UPDATED : ஆக 20, 2023 12:00 AM

ADDED : ஆக 20, 2023 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2023 12:00 AM ADDED : ஆக 20, 2023 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
அரசு ஐ.டி.ஐ.,யில் உள்ள ஆய்வகம், பொறியியல் கல்லுாரிகளை மிஞ்சும் அளவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, என கலெக்டர் கார்மேகம் பேசினார்.சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில், டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புது தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மென்பொருட்கள் நிறுவப்பட்டு ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல், மெக்கானிக் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புது தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஐ.டி.ஐ., வளாகத்தில் நேற்று நடந்தது.அதில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:
அரசு ஐ.டி.ஐ.,யில் உள்ள ஆய்வகம், பொறியியல் கல்லுாரிகளை மிஞ்சும் அளவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள், இத்தொழில் பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு, பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து புது தொழில்நுட்பங்களை எடுத்துரைக்க வேண்டும். அரசு ஐ.டி.ஐ.,க்களில் நடத்தப்படும் தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப, பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்ததும், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.ஐ.டி.ஐ., முதல்வர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us