தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை

பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை

பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை


UPDATED : ஆக 21, 2023 12:00 AM

ADDED : ஆக 21, 2023 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2023 12:00 AM ADDED : ஆக 21, 2023 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
வகுப்புகள் நடக்கும் போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக, கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
கர்நாடகாவின் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில், வகுப்பு நடக்கும் நேரத்தில், பள்ளி, கல்லுாரி வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளின் 100 மீட்டர் எல்லையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை, கடுமையாக செயல்படுத்த வேண்டும். மாணவ - மாணவியரை விளையாட்டுகள், உடற்பயிற்சி என பாடங்கள் சாராத விஷயங்களில் ஈடுபடுத்த வேண்டும்.கர்நாடக மாநில குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை - 2016 அமலில் உள்ளது. இதில் சில குளறுபடிகள் உள்ளதால் சிறார்கள் பாதிப்படைகின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், கட்டாயமாக பின்பற்ற வேண்டிய கொள்கையை செயல்படுத்துகிறோம். புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பெங்களூரு நகர போலீசார் 1908 என்ற எண்ணை, அறிமுகம் செய்துள்ளனர். இதை கல்வித்துறை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us