UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 09:15 AM
அ நிறம் | அளவு
தமிழக அரசின் தொழில்நுட்ப பல்கலையான, அண்ணா பல்கலை கடந்த, 2014ல் நாக் அந்தஸ்து பெற்றிருந்தது. ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், மீண்டும் நாக் அந்தஸ்து பெற, பல கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 10 நாட்களுக்கு முன், அண்ணா பல்கலையில், நாக் கவுன்சிலின் குழுவினர் நேரடி ஆய்வு நடத்தினர்.துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பேராசிரியர்கள், கல்லுாரி உள்கட்டமைப்பை நாக் குழுவுக்கு சுற்றிக் காட்டினர். இதையடுத்து, உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் முறைகளின் அடிப்படையில், ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கு, நாக் கவுன்சில் வழங்கியுள்ளது. மொத்தம், நான்கு மதிப்பெண்களுக்கு, 3.54 பெற்று, இந்த கிரேடை, அண்ணா பல்கலை பெற்றுள்ளது.
