தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கல்வி கொள்கை ரத்து பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

தேசிய கல்வி கொள்கை ரத்து பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

தேசிய கல்வி கொள்கை ரத்து பசவராஜ் பொம்மை எச்சரிக்கை


UPDATED : ஆக 23, 2023 12:00 AM

ADDED : ஆக 23, 2023 04:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2023 12:00 AM ADDED : ஆக 23, 2023 04:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
சித்தராமையா, நேரு குடும்பத்திற்கு ஜபம் செய்வதை விட வேண்டும். கல்வியில் அரசியல் புகுத்த கூடாது. தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்தால், மக்கள் புரட்சி எழும் என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்தார்.மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்த புதிய தேசிய கல்வி கொள்கை, நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. தற்போது, இதை ரத்து செய்து விட்டு, புதிய மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய கல்வி கொள்கையின் மகத்துவம் குறித்து, பீப்பிள்ஸ் போரம் பார் கர்நாடக எஜுகேஷன் என்ற அமைப்பு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் அரங்கில் நேற்று கருத்தரங்கம் நடத்தியது. இதில், கல்வி நிபுணர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கருத்தரங்கில் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:
நாட்டுக்கு சுதந்திரம் வந்த போது, 15 சதவீதம் பேர் மட்டுமே படிப்பறிவு கொண்டவர்களாக இருந்தனர். தற்போது 130 கோடிக்கும் அதிகமானோருக்கு படிப்பறிவு வழங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கேற்றவாறு கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டி உள்ளதால், மத்திய அரசு, புதிய தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்தது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இதை ரத்து செய்வதாக காங்கிரஸ் அரசு கூறியிருப்பது சரியில்லை.மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்யவே, மக்கள் அதிகாரம் வழங்கினர். பின்னோக்கி செல்வதற்கு அல்ல. சித்தராமையா, நேரு குடும்பத்திற்கு ஜபம் செய்வதை விட வேண்டும். கல்வியில் அரசியல் புகுத்த கூடாது. வாழ்க்கையில், கல்வி, வேலை, வளர்ச்சி மிகவும் முக்கியம். தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்தால், மக்கள் புரட்சி எழும். முடிவை மாற்றி கொள்ளுங்கள் என்று அரசை கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us