தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமத்து இளைஞர்களும் வேலை பெற உதவும் ’கோயிண்டியா’

கிராமத்து இளைஞர்களும் வேலை பெற உதவும் ’கோயிண்டியா’

கிராமத்து இளைஞர்களும் வேலை பெற உதவும் ’கோயிண்டியா’


UPDATED : ஜன 15, 2010 12:00 AM

ADDED : ஜன 15, 2010 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2010 12:00 AM ADDED : ஜன 15, 2010 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கிராம, நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களை தேடிப்பிடித்து, அவர்களது திறமையை மேம்படுத்தி வேலையையும் வாங்கித்தருகிறது ‘கோயிண்டியா’ நிறுவனம்.


கிராமப்புறங்களில் படிப்பை பாதியிலேயே விட்டு விட்ட இளைஞர்கள், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல இளைஞர்கள் உள்ளனர். இவர்கள், எங்கு சென்று யாரை பார்த்து வேலை கேட்பது என வழி தெரியாமல் உள்ளனர். இது போன்ற இளைஞர்களை அடையாளம் கண்டு, புதிய வேலை வாய்ப்பை உருவாக்கித்தர தமிழ்நாடு அரசு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, கிராமப்புற இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது ‘கோயிண்டியா’ (கோயம்புத்தூர் தொழில் கட்டமைப்பு சங்கம்) நிறுவனம். மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இன்ஜினியரிங் துறையில், ‘சி.என்.சி ஆபரேட்டர் அண்ட் புரோகிராமர்’, கன்வென்ஷனல் மெஷின் ஆபரேட்டர் உட்பட 56 வகையான இயந்திரங்களை இயக்க கோயிண்டியா நிறுவனத்தில் வசதிகள் உள்ளன. ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் அரசு அலுவலர்கள் தேர்வு செய்து தரும் கிராமப்புற இளைஞர்களுக்கு கோயிண்டியாவில் பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சியில் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, போன்றவைகளை நடத்துகிறது. பயிற்சி முடித்தோர், நேரடியாக தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகின்றனர்.


‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் இப்பயிற்சிக்கான கட்டணத்தில் சலுகை பெறுகின்றனர். நேரடியாக ‘கோயிண்டியா’ நிறுவனத்தை அணுகி, இளைஞர்கள் பயிற்சி பெறலாம். இவர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை ‘கோயிண்டியா’ வசூலிக்கிறது. எனவே, ‘எந்த இயந்திரத்தில் பயிற்சி பெற வேண்டும்’ என்பதை முடிவு செய்து, கோயிண்டியா நிறுவனத்தை அணுகினால், திறனை மேம்படுத்திக்கொள்வதோடு, வேலை வாய்ப்பையும் பெறலாம்.


ஒரு தொழில் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு, அந்த வேலையை செய்ய பிடிக்காமல், வேறு தொழிலுக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் மீண்டும் இங்கு பயிற்சி பெறலாம். அப்போதும், வேறு நிறுவனத்திற்கு வேறு வேலைக்கு செல்ல கோயிண்டியா நிறுவனம் பயிற்சி அளிப்பதோடு, வேலை வாய்ப்பையும் பெற்றுத்தருகிறது.நகர்ப்புற இளைஞர்கள் நேரடியாக கோயிண்டியா நிறுவனத்தை அணுகி பயிற்சியும், வேலையும் பெறலாம். தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த நினைத்தால், இங்கு பயிற்சிக்கு அனுப்பலாம். தேவையான இன்ஜினியரிங் இயந்திரங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சியை கோயிண்டியா அளிக்கும். வேறு தொழில் செய்ய விரும்புவோருக்கும் வழிகாட்டவும் தயாராக உள்ளது.


தொழில் தொடங்க விரும்புவோர், திட்ட அறிக்கையுடன் அணுகினால், தொழிலுக்கான பயிற்சி, கடனுதவி பெற வாழிகாட்டுதல்களை அளிக்கிறது.


இது குறித்து, கோயிண்டியா பயிற்சி தலைவர் ராஜாஜி கூறியதாவது:


படிப்பை பாதியில் விட்டாலும், வேலை இல்லை என்ற கவலை இளைஞர்களுக்கு தேவையில்லை. திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. திறமையை வளர்த்துக் கொண்டால், வேலையையும் வாங்கித்தருகிறோம். இங்கு பயிற்சி பெறும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. பயிற்சியில் சேரும்போதே ‘எந்த தொழிற்சாலையில் பணியாற்றப்போகிறீர்கள்’ என்பதையும் கூறி விட முடியும். தமிழக அளவில் எந்த பயிற்சி நிலையத்திலும் இல்லாத 56 வகையான இயந்திரங்கள், கோயிண்டியா பயிற்சி மையத்தில் உள்ளது. எனவே, இளைஞர்கள் தேர்வு செய்யும் இயந்திரங்களில் பயிற்சி அளிக்க தயராக உள்ளோம். இவ்வாறு பயிற்சி தலைவர் ராஜாஜி தெரிவித்தார்.


மேலும் விபரம் அறிய, பயிற்சி தலைவர் ராஜாஜியை 97919 00725 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது கோவை கே.ஆர்.புரம், ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள கோயிண்டியா பயிற்சி மையத்தை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us