புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: ஊக்குவிக்கிறது மாநில அரசு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: ஊக்குவிக்கிறது மாநில அரசு
UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 04:51 PM
மாவட்ட கல்வி அலுவலர் வாயிலாக, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 15ம் தேதி, அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோரை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்த்து, அடிப்படை எழுத்தறிவு கற்றுத்தரும் வகையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வரும் செப்., 1 முதல் துவங்க இருக்கும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில், கண்டறியப்படும், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி கல்லாதோர், அருகருகே உள்ள மையங்களில் சேர்க்கப்பட வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவோருக்கு, அடிப்படை கல்வியறிவு மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான திறமையை வளர்த்துக் கொள்வது, தொழில் பயிற்சி பெறுவது, வேலை வாய்ப்பு பெறுவது போன்றவைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது.
