தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே நாளில் இரு தேர்வு தேர்வர்கள் குழப்பம்

ஒரே நாளில் இரு தேர்வு தேர்வர்கள் குழப்பம்

ஒரே நாளில் இரு தேர்வு தேர்வர்கள் குழப்பம்


UPDATED : ஆக 24, 2023 12:00 AM

ADDED : ஆக 24, 2023 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2023 12:00 AM ADDED : ஆக 24, 2023 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்:
ஒரே நாளில் எஸ்.ஐ, மற்றும் தட்டச்சு தேர்வு நடப்பதால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.தமிழ்நாடு போலீஸ் துறையில் காலியாக உள்ள 749 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை மே மாதம் வெளியிடப்பட்டது. அதற்காக ஆன்லைனில் ஒரு மாதமாக தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வு ஆக., 26, 27ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.இதேபோல் தட்டச்சு தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தட்டச்சு பயிற்சி மையங்களிலும் தனியாக பயின்ற மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வும் ஆக.26, 27ல் நடக்கிறது. இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தவர்கள் எதை எழுதுவது என்ற குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us