தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்


UPDATED : ஆக 24, 2023 12:00 AM

ADDED : ஆக 24, 2023 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2023 12:00 AM ADDED : ஆக 24, 2023 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அசல் மதிப்பெண் சான்றுகள் அந்தந்த பள்ளிகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தது. இதில், பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியருக்கும் கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, அசல் மதிப்பெண் சான்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில், தங்களின் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us