தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை உணவு திட்டம்

அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை உணவு திட்டம்

அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை உணவு திட்டம்


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், 1,545 அரசு துவக்கப் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 1.14 லட்சம் மாணவ - மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்., 15ல் துவக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, மாநிலத்தில் மீதம் உள்ள, 31,000 அரசு பள்ளிகளுக்கும், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதை, முதல்வர் இன்று திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் துவக்கி வைத்தார். இனி இந்த திட்டத்தால், 17 லட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர்.ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு, 50 கிராம் அளவில் ரவை, கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் போன்றவை, 15 கிராம் பருப்பு, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன. சமைத்த உணவு, 100 முதல் 200 கிராம் வரையிலும், 60 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பாரும் வழங்கப்படும். சமைத்த உணவை, பள்ளி மேலாண்மை குழு ருசி பார்த்த பிறகே, மாணவருக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us