தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தென்துருவ சாதனையை சொல்லவே இல்ல...நாசா நிர்வாகிக்கு இந்தியர்கள் பதிலடி

தென்துருவ சாதனையை சொல்லவே இல்ல...நாசா நிர்வாகிக்கு இந்தியர்கள் பதிலடி

தென்துருவ சாதனையை சொல்லவே இல்ல...நாசா நிர்வாகிக்கு இந்தியர்கள் பதிலடி


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு இந்தியா என்பதை தனது வாழ்த்து செய்தியில் நாசா நிர்வாகி குறிப்பிடாததை சுட்டிக்காட்டி, உலகளாவிய இந்தியர்கள் டுவிட்டரில் கமென்ட் செய்துவருகின்றனர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி நேற்றுமுன்தினம் மாலை, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது, விண்வெளி பயணத்தில் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா உள்பட உலகளாவிய நாடுகளை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.நிலவை தொட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிர்வாகி பில் நெல்சன், சந்திரயான் -3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை இறக்கிய நான்காவது நாடாகிய இந்தியாவுக்கு வாழ்த்துகள். திட்டத்தில் உங்கள் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என டுவீட் செய்துள்ளார்.இதற்கு நிலவை அடைந்த 4வது நாடு என்ற கருத்தை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்பதையும் உங்கள் வாழ்த்துச் செய்தியில் சேர்க்கவேண்டும் என ஒருவர் பதில் டுவீட் செய்துள்ளார். உங்கள் வாழ்த்துச்செய்தியில், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு இந்தியா என்பதை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். சந்திரயான் - 3 வெற்றி முழுமையும் இஸ்ரோவையே சேரும் என்றும் உலகம் முழுதும் உள்ள இந்தியர்களை கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us