தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தினமலர் புதுச்சேரி பதிப்பின் இந்தாண்டிற்கான பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் நேற்று ஆரவாரத்துடன் துவங்கியது.பாட புத்தகங்களையும், பொது அறிவு விஷயங்களையும் தினமலர் - பட்டம் இதழ் எளிமைப்படுத்தி, தாய் மொழியான தமிழில் அளித்து வருகிறது. இந்தியாவில், வேறு எந்த மாநில மொழியிலும், இதுபோன்ற முயற்சி நடைபெறவில்லை. தமிழில் தான், முதன்முறையாக, இத்தகைய மாணவர் நாளிதழ் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்துத் தரப்பினரின் பேராதரவோடு பட்டம் இதழ் பீடுநடை போட்டு வருகிறது.பள்ளி மாணவர்களின் பொது அறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய, நுண்ணறிவை வளர்க்கும் வகையில், பட்டம் இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் இடம் பெறுவதால் இன்றைய தலைமுறையினருக்கு அறிவு பெட்டகமாக உள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழக பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், பட்டம் இதழ் சார்பில் பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற வினாடி - வினா போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.புதுச்சேரி பதிப்பு சார்பில், இந்தாண்டு மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 165 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. இதனை தினமலர் - பட்டம் இதழுடன், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறது. இந்த மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரியில் 45 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது.முதல் பள்ளியாக, புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் வினாடி வினாடி போட்டிக்கான தகுதி சுற்றாக முதல் நிலை தேர்வு நடந்தது. இதில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் 620 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை செயலர் கேசவன், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.தொடர்ந்து, 16 மாணவர்களும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வினாடி வினா போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 8 திணறடிக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த எட்டு அணியினருக்கும், சாய்ஸ் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டன. அதன்பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில், முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது. சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதிலளித்தனர்.இறுதியில் ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பிளஸ் 2 மாணவர் பிரதீப்தெய், ஒன்பதாம் வகுப்பு மாணவர் லக் ஷன் ஆகியோர் அடங்கிய அணி 30 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியது. பிளஸ் 1 மாணவர் லோக்நாத், பிளஸ் 2 மாணவர் சுதர்சன் ஆகியோர் அடங்கிய மற்றொரு அணி 25 மதிப்பெண்களுடன் இரண்டாம் பிடித்தது. முதலிடம் பிடித்த அணி, மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கும் அடுத்த சுற்றுக்கு தேர்வானது. இதேபோல், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள 120 பள்ளிகளில் நடக்கும் தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டியில் இருந்து முதலிடம் பிடிக்கும் அணி, மாநில அளவிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்கள், அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை செயலர் கேசவன், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர். சிறப்பு விருந்தினர்களுக்கு, புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் நினைவு பரிசு வழங்கினார். மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் கவுரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us