இது சிறிய சாதனை அல்ல: பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இது சிறிய சாதனை அல்ல: பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 05:58 PM
புதுடில்லி:
செஸ் உலகப் கோப்பையில் ரன்னர் அப் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.செஸ் உலகக்கோப்பை பைனலில், இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான நார்வே நாட்டை சேரந்த மேக்னஸ் கார்ல்சனிடம் போராடி வீழ்ந்தார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவுக்கு, பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.பிரக்ஞானந்தாவுக்கு, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
செஸ் உலக கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அபார திறமையை அவர் வெளிப்படுத்தினார். பைனலில் கார்ல்சனுக்கு கடும் சவால் அளித்தார். இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல. எதிர்கால போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் வாழ்த்தினார்.
