நிலவில் 8 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து ரோவர் ஆய்வு: இஸ்ரோ
நிலவில் 8 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து ரோவர் ஆய்வு: இஸ்ரோ
UPDATED : ஆக 26, 2023 12:00 AM
ADDED : ஆக 26, 2023 11:07 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
எதிர்பார்த்தபடி பிரக்யான் ரோவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.இது குறித்து கூறப்படுவதாவது:
நிலவின் தென் துருவத்தில் 8 மீட்டர் தொலைவிற்கு வெற்றிகரமாக நகர்ந்து ஆய்வு செய்தது ரோவர். ரோவரில் பொருத்தப்பட்டு உள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாகசெயல்படுகி்ன்றன. ரோவரில் உள்ள இரு கருவிகளும் ஆய்வு பணியில் ஈடுபட துவங்கி உள்ளன.ரோவர் மட்டுமின்றி விகரம் லேண்டர் மற்றும் உந்துவிசை கலனும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுவருகிறது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
