UPDATED : ஆக 27, 2023 12:00 AM
ADDED : ஆக 27, 2023 02:12 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகத்தில், எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு, நேற்று நடந்தது.தமிழக காவல் துறையில், 621 எஸ்.ஐ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த மே 5ம் தேதி வெளியிட்டது. இதில், 469 ஆண் எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, ஒரு லட்சத்து 45,804 பேர்; 152 பெண் எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, 40,885 பேர்; 33 திருநங்கையர் உட்பட, ஒரு லட்சத்து 86,722 பேர் விண்ணப்பித்தனர்.இதற்கான தேர்வு, நேற்று நடந்தது. அதில் பொதுப் பிரிவினருக்கு 33 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை 10:00 முதல் பகல் 12:30 மணி வரை, முதன்மை தேர்வு நடந்தது. பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:10 மணி வரை, தமிழ் தகுதி தேர்வு நடந்தது. ஒரு லட்சத்து 51 ஆயிரத்து, 375 பேர் தேர்வு எழுதினர்.
