தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கல்லுாரிகளை வற்புறுத்த கூடாது

புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கல்லுாரிகளை வற்புறுத்த கூடாது

புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கல்லுாரிகளை வற்புறுத்த கூடாது


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 07:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு நிர்ணயித்தபடி, முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்கும்படி, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளை வற்புறுத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி டீன், தாக்கல் செய்த மனு:
மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணத்தை, மூன்று ஆண்டுகளுக்கு என, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, 2021 அக்டோபரில் பிறப்பித்தது. அதன்படி, 2023 - 24 வரை இந்த உத்தரவு செல்லும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.80 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 16 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 3.29 லட்சம் ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளது. 2021ல் ஓய்வு பெற்ற நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தை அமல்படுத்த அரசிடம் கோரினோம்.இடைக்கால தடை
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்து, கல்லுாரியில் சேரும் நிலையில் உள்ளனர். எனவே, கடந்த, 18ல் பிறப்பிக்கப்பட்ட புதுச்சேரி அரசின் உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ஆர்.கமலநாதன் ஆஜரானார். புதுச்சேரி அரசு சார்பில், கூடுதல் பிளீடர் ஸ்ரீதர் நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கடந்த ஆண்டு அக்டோபரில் புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டண விகிதத்துக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்த கட்டணத்தை, கல்லுாரிகள் வசூலித்துக் கொள்ளலாம். அந்த மனு, இன்னும் நிலுவையில் உள்ளது. இடைக்கால தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த, 18ம் தேதி, எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கு, புதிய கட்டணத்தை நிர்ண யித்து, புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக, மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். ஓய்வு நீதிபதி தலைமையிலான புதிய நிர்ணய குழு முடிவெடுக்கும் வரை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் அமலில் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.இறுதி முடிவு
எனவே, 18ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும்படி, தனியார் மருத்துவக் கல்லுாரி களை, புதுச்சேரி அரசு வற்புறுத்தக் கூடாது. ஏற்கனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் வசூலிக்க வேண்டும். இந்தக் கட்டணம் வசூல், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us